ஊரடங்கு நடைமுறையில் உள்ள போதிலும் அதிகமான மக்கள் வாகனம் ஓட்டுகின்றனர்: RAC

கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையான ஊரடங்கு, நடைமுறையில் உள்ள போதிலும், அதிகமான மக்கள் தங்கள் கார்களைப் பயன்படுத்துவதாக, பிரித்தானிய வாகன சேவை நிறுவனமான ரோயல் ஒட்டோமொபைல் கழகம் (RAC) கணித்துள்ளது.

ஊரடங்கின் இரண்டாவது வாரத்தை விட, இந்த வாரம் 11 சதவீதத்திற்கும் அதிகமான வாகனங்கள் வீதியில் உள்ளன என ரோயல் ஒட்டோமொபைல் கழகத்தின் ஆய்வறிக்கை தெரிவிக்கின்றது.

இதற்கிடையில், அதே காலகட்டத்தில் அவசரகால அழைப்புகளின் எண்ணிக்கை 18 சதவீதமான உயர்ந்துள்ளது.

இதுகுறித்து ரோயல் ஒட்டோமொபைல் கழகத்தில் வீதிகள் கொள்கைத் தலைவர் நிக்கோலஸ் லைஸ் கூறுகையில், “மக்கள் தங்கள் வாகனங்களில் திரும்பிச் செல்கிறார்கள் என்பதற்கான ஆதாரங்கள் இப்போது கிடைத்துள்ளன” என கூறினார்.

மேலும், கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும் ஏன் அதிகமான மக்கள் வாகனம் ஓட்டுகிறார்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “இது ஊரடங்கினால் ஏற்பட்ட சோர்வு மற்றும் சலிப்பால் இது உந்தப்படலாம். அதே நேரத்தில் வசந்த காலநிலையும் ஓட்டுனர்களை தங்கள் வாகனங்களுக்குள் கவர்ந்திழுக்கும்” என கூறினார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்