தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு : சென்னை உயர் நீதிமன்றம்
தமிழகத்தில் மதுக்கடைகள் மூடப்பட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் உயர்நீதிமன்றத்தில் மதுக்கடைகள் திறக்கப்படுவதற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் மதுக்கடைகளைத் திறப்பதற்குத் தடை விதிக்க மறுப்பு தெரிவித்தது.
இருப்பினும் சமூக இடைவெளி மற்றும் பாதுகாப்புடன் மதுபானம் விற்பனை செய்ய உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து நேற்று தமிழகத்தில் மதுபான விற்பனை நடைபெற்றது.
இந்நிலையில் மதுபான விற்பனையின் போது, எந்தவித சமூக இடைவெளியும் பின்பற்றப்படவில்லை என இன்று அவசர வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது, மதுக்கடைகளில் சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படவில்லை என நீதிபதியின் முன்பு வீடியோ மற்றும் புகைப்பட ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டன.
இதையடுத்து தமிழகத்தில் மதுக்கடைகளை மூட உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. பொது முடக்கம் முடியும் வரை மதுக்கடைகளைத் திறக்கக்கூடாது எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு நாளை காலை முதல் அமுலுக்கு வரும் என கூறப்படுகின்றது.
இதனிடையே ஒன்லைன் மூலம் மட்டுமே மதுபானம் விற்பனை செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கருத்துக்களேதுமில்லை