பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கு பெரும்பாலானோர் எதிர்ப்பு!

இங்கிலாந்தில் ஆரம்ப பாடசாலைகள் எதிர்வரும் மாதம் ஜூன் 1ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படலாம் என பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் அறிவித்துள்ளநிலையில், அவரின் இந்த முடிவினை பலரும் ஏற்க மறுத்துள்ளனர்.

குறிப்பாக, பிரதமர் பொரிஸின் இந்த பரிந்துரையை ‘பொறுப்பற்றது’ என ஆசிரியர் தொழிற்சங்கம் விபரித்துள்ளது.

அடுத்த மாதத்தின் தொடக்கமானது மாணவர்களை மீண்டும் பாடசாலைக்கு அனுப்புவது குறித்து பரிசீலிக்கக்கூடிய ஆரம்ப திகதி என பிரதமர் அறிவித்தைத் தொடர்ந்து நடப்பட்ட கணக்கெடுப்பிலும், பெரும்பாலானோர் இந்த முடிவினை ஏற்க மறுத்துள்ளனர்.

ஒரு கணக்கெடுப்புக்கு பதிலளித்த அதன் 49,000 உறுப்பினர்களில் 85 சதவீதம் பேர், பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கான முடிவினை ஏற்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பாடசாலைகளை திறப்பதில் பாதுகாப்பாக இருக்க மாட்டார்கள் என 92 சதவீதமான பாடசாலைகள் கூறியுள்ளதாகவும் தேசிய கல்வி ஒன்றியம் கூறுகிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.