மூன்றில் ஒரு பகுதி பராமரிப்பு இல்லங்களில் கொரோனா வைரஸ் தொற்று!

இங்கிலாந்தில் உள்ள பராமரிப்பு இல்லங்களில் மூன்றில் ஒரு பகுதியினர் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த மார்ச் 15ஆம் திகதி முதல், ஒட்டுமொத்த 15,514 பராமரிப்பு இல்லங்களில் 5,546 பராமரிப்பு இல்லங்களில் வைரஸ் தொற்று

உறுதிபடுத்தப்பட்டுள்ளன. அல்லது அறிகுறி தென்பட்டுள்ளன என இங்கிலாந்து பொது சுகாதார துறையில் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேசிய புள்ளிவிபரங்களுக்கான அலுவலகம் மற்றும் ஸ்கொட்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்து கூற்றுப்படி, கொரோனா வைரஸ் தொற்றால், பிரித்தானியாவில் 9,700இற்குக்கும் மேற்பட்ட பராமரிப்பு இல்ல குடியிருப்பாளர்கள் உயிரிழந்துள்ளனர்.

இங்கிலாந்தில், ஸ்கில்லி தீவுகளைத் தவிர, பராமரிப்பு இல்லங்களைக் கொண்ட ஒவ்வொரு உள்ளூர் அதிகாரப் பகுதியும் தற்போது குறைந்தது ஒரு வைரஸ் தொற்றையாவது உறுதி செய்துள்ளது.

கடந்த ஏப்ரல் 6ஆம் திகதி முதல் வாரத்தில் 1,002 என்ற உச்சநிலையிலிருந்த தொற்று, மே 4ஆம் திகதி முதல் வாரத்தில் 418ஆக குறைந்துள்ளது.

பராமரிப்பு இல்லங்களில் வைரஸ் தொற்றுநோயைக் கட்டுப்படுத்த அரசாங்கம் 600 மில்லியன் டொலர் செலவிட உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.