ரோல்ஸ் ரோய்ஸ் நிறுவனம் 9,000 பேரை பணிநீக்கம் செய்ய முடிவு!

உலகளவில் தலைசிறந்த நிறுவனமாக திகழும் பிரித்தானியாவின் ரோல்ஸ் ரோய்ஸ் நிறுவனம், 9,000 பேரை பணிநீக்கம் செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் (கொவிட்-19) காரணமாக எழுந்த விமானப் பயணத்தின் வீழ்ச்சியைச் சமாளிக்க, வருடாந்திர செலவான 1.3 பில்லியன் பவுண்டுகளை சேமிக்கும் ஒரு கட்டமாக இந்த நடவடிக்கையை ரோல்ஸ் ரோய்ஸ் நிறுவனம் எடுத்துள்ளது.

இதுகுறித்து ரோல்ஸ் ரோய்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி வாரன் ஈஸ்ட் கூறுகையில், ‘வாடிக்கையாளர்களிடமிருந்து நாங்கள் காணும் புதிய தேவைக்கு ஏற்ப எங்கள் வணிகத்தின் ஒரு பெரிய மறுசீரமைப்பை நாங்கள் முன்மொழிகிறோம்

இதன் விளைவாக, எங்கள் உலகளாவிய தொழிலாளர்களில் 52,000 பேரிலிருந்து குறைந்தது 9,000 பேரை இழக்க நேரிடும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்’ என கூறினார்.

வேலை இழப்புகள் பெரும்பாலும் civil aerospace வணிகத்தில் நிகழும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

நீண்ட பாரம்பரியத்தை கொண்ட ரோல்ஸ் ரோய்ஸ் நிறுவனம், 1904ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்