ஒருநாள் மரணங்கள்- 100களில் பிரிட்டன் – 75களில் ஐரோப்பா – 1 லட்சத்தை நெருங்கும் USAயின் மொத்த மரணங்கள்…

பிரிட்டனில் கடந்த 24 மணித்தியாலத்தில் +118  இறப்புகள் பதிவாகி உள்ளதாக, கொரோனா வைரஸ் தொற்று அனர்த்தம் குறித்து, புள்ளிவிபரங்களை வெளியிட்டுவரும் உலக இணையம் தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் +282 ஆக பதிவாகிய இறப்புகள், இன்று  +164ஆல் மீண்டும்  குறைந்துள்ளது. இந்த நிலையில் பிரிட்டனின் மொத்த மரணங்கள், 36,793 ஆக உயர்ந்துள்ளன. அத்துடன் புதிய தொற்றாளர்கள் +2,405 பேருடன் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 259,559  ஆக உயர்ந்துள்ளது.

இதேவேளை, சுவிற்சலாந்தில்  +1 இறப்பும், ஜேர்மனில் +5 இறப்புகளும், சுவீடனில் +6 இறப்புகளும், நெதர்லாந்தில் 11 இறப்புகளும்,  பிரான்ஸில் +35 இறப்புகளும்,  பெல்ஜியத்தில் +43 இறப்புகளும், இத்தாலியில் +50 இறப்புகளும்,   ஸ்பெயினில் +74 இறப்புகளும்,  ரஷ்யாவில் +153 இறப்புகளும், மறுபுறம் கனடாவில் +69 இறப்புகளும், மெக்ஸிக்கோவில் +190 இறப்புகளும், பிறேசிலில் +278 இறப்பகளும், இந்தியாவில் +156  இறப்புகளும், பதிவாகி உள்ளன.

இதேவேளை, பிரிட்டன் நேரம் 20.20 மணி அளவில் வெளியான தகவலின்படி, அமெரிக்காவின் மொத்த இறப்புகள் 99 ஆயிரத்தைக் கடந்து 99,047 ஆக உயர்ந்துள்ளன. தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,677,614  உயர்ந்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.