தமிழகத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக 11 மாவட்டங்களில் இன்று (திங்கட்கிழமை) இடியுடன் கூடிய லேசான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன்படி கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், சேலம், நாமக்கல், திருச்சி, தேனி, தென்காசி, நீலகிரி, கோயம்புத்தூர், மதுரை ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
அதே நேரத்தில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தருமபுரி, சேலம் கள்ளக்குறிச்சி, நாமக்கல், திருச்சி, கரூர் ஆகிய மாவட்டங்களில் 104 முதல் 108 பாகை செல்சியஸ் வரை வெப்பம் நிலவக்கூடும் எனவும் வானிலை ஆய்வு நிலையம் எதிர்வுக்கூறியுள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பலத்த காற்று வீசும் என்பதால் நாளை மற்றும் நாளை மறுநாள் வடமேற்கு வங்கக் கடல் பகுதிக்கும் அடுத்த 5 நாட்களுக்கு தென்மேற்கு அரபிக்கடலுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை