“மலையக தமிழர்களின் உரிமைகளுக்காக பாடுபட்டவர்” – ஆறுமுகன் தொண்டமானின் மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்

அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் மறைவு செய்தி, தாங்க முடியாத துயரத்தினை அளித்துள்ளதாக தமிழக அரசியல் தலைவர் திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் மறைவினை முன்னிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே ஸ்டாலின் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆறுமுகன் தொண்டமான் இந்திய வம்சாவளியை சேர்ந்த மலையக தமிழர்களின் உரிமைகளுக்காக பாடுபட்டு வந்தவர் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தங்களின் நலன்களுக்காக காலமெல்லாம் பாடுபட்ட ஒரு இளம் தலைவரை மலையக தமிழர்கள் இழந்து தவிப்பதாகவும் ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.