மோடி தலைமையில் அமைச்சரவை குழுக் கூட்டம்: பொருளாதார நடவடிக்கைகள் குறித்து விசேட கலந்துரையாடல்!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று (திங்கட்கிழமை) பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு கூட்டம் நடைபெற்றது.

பிரதமரின் இல்லத்தில் நடைபெற்ற இந்தக்கூட்டத்தில்  கொரோனா தடுப்பு நடவடிக்கை,  நிவாரண நடவடிக்கைகள்,  பொருளாதார மீட்பு திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அத்துடன் விவசாயிகளுக்கான நிவாரணம் குறித்து விவாதிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வந்த போதிலும் மக்களின் வாழ்வாதாரம்,  பொருளாதாரம் ஆகியவற்றை கருத்திற் கொண்டு,  ஊரடங்கு தொடர்பான பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய, மாநில அரசுகள் சில தளர்வுகளை அறிவித்துள்ளன.

இந்நிலையில் குறித்த அமைச்சரவை குழுக் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்