கொரோனா வைரஸ் பாதிப்பு : உலகளவில் ஏழாவது இடத்திற்கு முன்னேறியது இந்தியா!

கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் வரிசையில்  இந்தியா 7 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

கொரோனா  தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட 10 நாடுகளில் கடைசி இடத்தில் இருந்த ஈரானை பின் தள்ளிய இந்தியா கடந்த 25 ஆம் திகதி 10ஆவது இடத்தை பிடித்திருந்தது.

இதனையடுத்து கடந்த 29 திகதி நான்கு நாட்கள் இடைவெளியில் 9 ஆவது இடத்திற்கு முன்னேறியிருந்தது. தற்போது இரண்டு நாட்கள் இடைவெளியில் 7 ஆவது இடத்திற்கு முன் நகர்ந்துள்ளது.

இந்தியாவில் கடந்த  ஒரு சில தினங்களாக ஒருநாள் பாதிப்பு 8 ஆயிரத்தை கடந்த நிலையில் உள்ளது. இதன்படி கடந்த 24 மணித்தியாலங்களில் 8782 பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தமாக 190,609 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்ற நிலையில், 5,408 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். இதன்படி இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் தொடர்ச்சியாக ஏறுமுகத்தில் இருப்பதை காணக்கூடியதாகவுள்ளதாக மருத்துவ நிபுணர் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்