இந்தியாவில் ஒரே நாளில் 8,171 பேருக்கு கொரோனா – 2 இலட்சத்தை நெருங்கும் மொத்த பாதிப்பு

இந்தியாவில் ஒரே நாளில் 8,171 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனையடுத்து, நாட்டில் கொரோனா உறுதிபடுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்தை நெருக்கியுள்ளது.

அதேநேரம் கடந்த 24 மணி நேரத்தில் 204 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அங்கு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை  5,608 ஆக அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின்படி, இன்று (செவ்வாய்க்கிழமை) காலை நிலைவரப்படி, இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 98 ஆயிரத்து 706 ஆக அதிகரித்துள்ளது.

அதேபோல, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 5,608 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இந்த வைரஸ் தொற்றிலிருந்து இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 95,526 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் கொரோனா பாதிப்புடன் தற்போது 97,581 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். என்பதோடு, கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், 8,171 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்