தமிழகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் – முதலமைச்சர் ஆலோசனை

கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் குறித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார்.

சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இந்த ஆலோசனைக் கூட்டம் இடம்பெறவுள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் சுகாதாரத்துறை, மாநகராட்சி அதிகாரிகள் பங்கேற்கவுள்ளனர்.

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23,495 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 15,776 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் சென்னையில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனாவை கட்டுப்படுத்துவது இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படவுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்