கருணாநிதி நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை
முன்னாள் தமிழக முதலமைச்சர் மறைந்த கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி அவரது நினைவிடத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 97ஆவது பிறந்தநாள் இன்று (புதன்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதற்கமைய சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதியின் நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
நினைவிடத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியதாதை செலுத்தினார். அதனைத்தொடர்ந்து, துரைமுருகன், டி.ஆர்.பாலு, கனிமொழி, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.
இதெவேளை, கருணாநிதியின் 97ஆவது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, அவரது நினைவிடத்தில் ஒரு ஜோடிக்கு மு.க.ஸ்டாலின் இலவச திருமணம் செய்து வைத்தார்.
கொரோனா பரவலால் கருணாநிதியின் பிறந்தநாளுக்காக எவ்வித ஆடம்பர நிகழ்வுகளையும் நடத்த வேண்டாம் என தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
மாறாக சமூக ஒழுங்கினைக் கடைப்பிடித்து, அவரவர் இடங்களில் தேவையானவர்களுக்கு நிவாரண உதவிகளை செய்து கருணாநிதியின் புகழைப் போற்ற வேண்டும் என கட்சி நிர்வாகிகளுக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை