‘நிசர்கா’ புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து பிரதமர் தலைமையில் ஆலோசனை
‘நிசர்கா’ புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து விவாதிக்க டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் கூடுகிறது.
டெல்லியில் உள்ள பிரதமர் மோடியின் இல்லத்தில் இன்று (புதன்கிழமை) இந்த கூட்டம் நடைபெறவுள்ளது.
மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பள்ளிகள், கல்லூரிகள் திறப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்று கடந்த 30ஆம் திகதியுடன் ஓராண்டு நிறைவடைந்தது.
இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் 2ஆவது ஆட்சி காலத்தில் இரண்டாம் ஆண்டின் 2ஆவது மத்திய அமைச்சரவை கூட்டம் இது என்பதுடன், நேற்று முன்தினம் முதல் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
‘நிசர்கா’ புயல் நேற்று முதல் மகாராஷ்டிரா மற்றும் குஜராத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. இந்த இரண்டு மாநிலங்களுக்கு இடையே நாளை கரையை கடக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், மத்திய கிழக்கு அரபிக் கடலில் நிலை கொண்டிருந்த நிசர்கா தீவிர புயலாக மாறியுள்ளது. மும்பை அருகே இன்று பிற்பகலில் கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், இராணுவ வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை