எல்லைப் பிரச்சினை குறித்து விரிவான அறிக்கையை சமர்பித்தது பாதுகாப்பு முகமை!

இந்தியா – சீனா இடையில் நிலவும் எல்லைப் பிரச்சினை குறித்த விரிவான அறிக்கையை  பாதுகாப்பு முகமைகள் மத்திய அரசிடம் கையளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த அறிக்கையில் லடாக்கில் தற்போது நடந்து வரும் முன்னேற்றம் மற்றும் கிழக்கு லடாக்கின் பல்வேறு செக்டார்களில் சீன இராணுவம் எவ்வாறு துருப்புக்களை கொண்டு வந்தது என்பது குறித்த விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.

சீன இராணுவம் தனது எல்லையிலிருந்து நடைமுறை எல்லைக்கட்டுப்பாடு கோடு பகுதியில் எவ்வாறு விரைவாக தனது படைகளை வலிமையான ஆயுதங்களுடன் குவித்தது என்றும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எல்லை பிரச்சினை தொடர்பாக இந்தியா – சீனா இடையில் லெப்டினன்ட் ஜெனரல் அளவிலான பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. இந்நிலையில்  இந்தியாவின் லடாக் எல்லை பகுதியில் சீன இராணுவம் துருப்புகளை நிறுத்தியதாலும்,  ஹெலிகொப்டர்  மூலம் ரோந்து சென்றதாலும் கடந்த 25 நாட்களாக பதற்றம் நீடிக்கிறது.

இது குறித்து பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன. இதில் ஜூன் 6ஆம் திகதி லெப்டினன்ட் ஜெனரல் அளவிலான பேச்சுவார்த்தைகள் நடைபெறுவது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.