கர்பிணி யானை கொலை செய்யப்பட்ட விவகாரம் : ஒருவர் கைது!

கேரளாவில் கர்ப்பிணி யானை ஒன்று கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக  ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம்  அமைதிப் பள்ளத்தாக்கு பூங்காவைச் சேர்ந்த யானை ஒன்று உணவுத்தேடி கிராமத்திற்குள் சென்றுள்ளது.

அங்கு இருந்தவர்கள் வெடி வைக்கப்பட்ட அன்னாசிப் பழத்தை யானைக்கு கொடுத்துள்ளனர். கர்ப்பமாக இருந்த குறித்த  யானை அதைச் சாப்பிட்டவுடன் நாக்கு, வாய் உள்ளிட்ட உறுப்புகள் சிதறிய நிலையில் தண்ணீருக்குள் இறங்கி நின்றுள்ளது.

இதனையடுத்து  வனத்துறை அதிகாரிகள்  கும்கி யானையின் உதவியோடு அந்த யானையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இருப்பினும் குறித்த முயற்சி பயனலிக்காத நிலையில் யானை உயிரிழந்தது.

இந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து  கேரள அரசிடம்  மத்திய அரசு வினவியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக கேரள வனத்துறை பொலிஸார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வந்த நிலையில், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்