இந்தியா-அவுஸ்ரேலியா இடையே 7 ஒப்பந்தங்கள் கைச்சாத்து!

இந்தியா- அவுஸ்ரேலியா இடையே இருநாட்டு இராணுவங்களையும் பரஸ்பரம் பயன்படுத்திக் கொள்வது குறித்து ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

பாதுகாப்புத் துறையில் இந்தியா-ஆஸ்திரேலியா இடையே நிலவி வரும் ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில் குறித்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தியா- அவுஸ்ரேலியா இடையேயான இணையவழி மாநாடு நேற்று (வியாழக்கிழமை)  நடைபெற்றது. குறித்த மாநாட்டில் பிரதமா் நரேந்திர மோடி, அவுஸ்ரேலிய பிரதமா் ஸ்காட் மொரிஸனும் பங்கேற்றனா்.

இதனையடுத்த குறித்த மாநாட்டின் நிறைவாக கூட்டறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையிலேயே மேற்படி கூறப்பட்டுள்ளது.

இதன்போது  பயங்கரவாத அச்சுறுத்தல்,   இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் கடல்சாா் பாதுகாப்புக்கு நிலவும் அச்சுறுத்தல்கள்,  உலக வா்த்தக அமைப்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீா்திருத்தங்கள்,   கொரோனா நோய்த்தொற்றை எதிா்கொள்வதற்கான வழிமுறைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக கலந்தாலோசிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான இரட்டை வரிவிதிப்பு தவிா்ப்பு ஒப்பந்தத்தில் காணப்படும் குறைபாடுகளை விரைந்து களைவது தொடா்பாகவும்,    இரு நாடுகளுக்கிடையே பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை மீண்டும் ஏற்படுத்துவதும் குறித்தும் ஆராயப்பட்டுள்ளது.

அத்துடன் பிராந்தியத்தின் அமைதிக்கும் ஸ்திரத்தன்மைக்கும் பயங்கரவாதம் அச்சுறுத்தலாக விளங்கி வருவதை இருநாட்டுத் தலைவா்களும் ஒப்புக்கொண்டதுடன், இணைய வழியாக பயங்கரவாதத்தைப் பரப்புவதைத் தடுப்பதற்கு வலைதள நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்ற இரு நாடுகளும் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.