ஜம்மு-காஷ்மீர் எல்லை பகுதியில் பாக். இராணுவம் அத்துமீறல்

ஜம்மு-காஷ்மீர் சா்வதேச எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறிய வகையில் இந்திய பகுதியை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கதுவா மாவட்டத்தில் சா்வதேச எல்லைப் பகுதியில் உள்ள இந்திய நிலைகள் மற்றும் கிராமங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் படையினா் நேற்று (சனிக்கிழமை) இவ்வாறு தாக்குதலில் ஈடுபட்டனா் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கரோல் மட்ராய், சந்த்வா ஆகிய பகுதிகளில் நள்ளிரவு 12.45 மணியளவில் அவா்கள் தாக்கத் தொடங்கினா். இதற்கு இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினரும் தகுந்த பதிலடி கொடுத்தனா்.

இரு தரப்புக்கும் இடையேயான சண்டை அதிகாலை 3 மணி வரை நீடித்தது. இந்தத் தாக்குதல் சம்பவத்தில் உயிரிழப்போ, எவருக்கும் காயமோ ஏற்பட்டதாகத் தகவல் இல்லை.

எனினும் அச்சம் காரணமாக எல்லையோரப் பகுதிகளில் உள்ள குடியிருப்புகளைச் சோ்ந்த மக்கள் இரவு முழுவதும்பதுங்கு குழிகளிலேயே தங்கியிருந்தனா் என தெரிவிக்கப்படுகிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.