புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

சென்னை,  தேனி,  திண்டுக்கல் உள்ளிட்ட  ஐந்து மாவட்டங்களில்  அடுத்த 24 மணி நேரத்தில்  இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதுடன் வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் சூழல் காணப்படுவதாக வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.

இதனால்  தென் மேற்கு பருவ மழை மேலும்தீவிரமடையும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

புதிய தாழ்வு மையத்தால் தமிழகம், புதுவையில் தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச் சலனம் காரணமாக அடுத்த 24 மணித்தியாலத்தில் ஒருசில இடங்களில் மிதமான மழைபெய்யக்கூடும் என எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.

மன்னார் வளைகுடா,  குமரிக்கடல் மற்றும் தெற்கு,  மத்திய கிழக்கு வங்கக் கடலில்  மணிக்கு  50 கி.மீ  வேகத்தில் சூறாவளிக் காற்று வீசும் எனவும் இலட்சத் தீவு,  கேரள கடலோரப் பகுதி,  அதையொட்டிய அரபிக் கடல் பகுதியில்,  மணிக்கு  60 கி.மீ.  வேகத்தில்  சூறாவளிக் காற்று வீசும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், வட மேற்கு மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலையாக 40 முதல் 42 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவாகும் எனவும் கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்