மிதுன பூஜையையொட்டி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு!

பக்தர்கள் தரிசனத்துக்காக மிதுன பூஜையையொட்டி சபரிமலை கோவில் நடை  எதிர்வரும் 14ஆம் திகதி திறக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

10 வயதிற்கு உட்பட்டவர்களுக்கும் 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா பரவலையடுத்து வழிபாட்டுத்தலங்கள் மூடப்பட்டன. கோவில்களை திறக்க தற்போது மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதனையடுத்து பக்தர்கள் தரிசனத்துக்காக சபரிமலை கோவில் நடை திறக்கப்படவுள்ளது.

தினமும் காலை 4 மணி முதல் மதியம் 1 மணி வரையும்,  மாலை 4 மணி முதல் இரவு 11 மணி வரை மட்டுமே பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு மணி நேரத்திற்கு தலா 200 பேர் வீதம் தினமும் 16 மணி நேரத்தில் 3200 பேர் மட்டுமே கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் ஆற்றில் குளிக்கக்கூடாது என்றும்,  தங்கும் வசதி இல்லை என்றும் கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளமை  குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்