ஒடிசா பயிற்சி விமான விபத்தில் இருவர் உயிரிழப்பு!

ஒடிசாவில் பயிற்சி விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

ஒடிசாவின் தென்கனல்  மாவட்டத்தில் அரசு விமானப் பயிற்சி நிறுவனம் உள்ளது. இந்த பயிற்சி நிறுவனத்தை சேர்ந்த  விமானப் பயிற்சியாளர் கேப்டன் சஞ்சீப் குமார் ஜா, தமிழகத்தை சேர்ந்த பயிற்சி விமானியான அனீஸ் பாத்திமான என்பவருக்கு பயிற்சி அளித்துள்ளார்.

இதன்போது விமான ஓடுதளத்தில் இருந்து புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் குறித்த விமானத்தில் பயணித்த இருவருமே உயிரிழந்துள்ளனர்.

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக குறித்த விமான் விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ள நிலையில், இது குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்