புலம் பெயர் தொழிலாளர்களுக்காக 11 இலட்சத்திற்கும் அதிகமாக செலவிடப்பட்டுள்ளது – அனில் தேஷ்முக்

புலம் பெயர் தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்ப இதுவரை 11 இலட்சத்துக்கும் அதிகமாக செலவிடப்பட்டுள்ளதாக மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் தெரிவித்துள்ளார்.

ஊரடங்கு காரணமாக மகாராஷ்டிராவில் சிக்கிய இலட்சக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். இந்தநிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர் மேற்படி தகவல் வெளியிட்டுள்ளார்.

தொடர்ந்து தெரிவித்துள்ள அவர்,  “மகாராஷ்டிரா அரசு,  மத்திய அரசின் உதவிக்கு காத்திருக்காமல் தொழிலாளர்களை சொந்த செலவில் ஊருக்கு அனுப்பியது. இதுவரை 100 கோடி ரூபாய் செலவில் 11 இலட்சத்துக்கும் அதிகமான புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

பொதுமக்கள் உடல் நல பாதிப்பு ஏற்பட்டால் மாநில அரசின் மகாத்மா ஜோதிபா புலே ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டத்தின் கீழ் இலவசமாக சிகிச்சை பெற முடியும்.

இதற்காக மாநில அரசு சில வைத்தியசாலைகளை மாநிலம் முழுவதும் அடையாளம் கண்டுள்ளது. 55 வயதுக்கு மேற்பட்ட பொலிஸாரை பணிக்குவர வேண்டாம் என கூறியுள்ளோம். ஆனால் அவர்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.