தமிழகத்தில் தீவிரத்தன்மை கொண்ட புதிய கொரோனா வைரஸ்!

தமிழகத்தில் பரவி வரும் கொரோனா வைரஸில் புதிய வகை ஒன்றினை சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.

கொரோனா வைரஸில் சில மாற்றங்கள் ஏற்பட்டு, கிளேட் ஏ 1 3, (Glade A 1 3 i)என்ற புதிய வகை பரவி வருவதாக  அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த வைரஸின் தாக்கம், ஏனைய வைரஸ்களை விட மிகவும் தீவிரத்தன்மை கொண்டதாக காணப்படுவதாக  சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் தெலுங்கானா, ஆந்திரா ஆகிய மாநிலங்களிலும் கிளேட் ஏ 1– 3 என்ற வகை வைரஸின் தாக்கம் இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதேசமயம் இதனை தடுப்பதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்த வகை வைரஸ்கள் மராட்டியத்தில் இருந்து பரவி இருக்கலாம் என கூறப்படுகிறது.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 31,667 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் இன்று மாத்திரம்  1,515 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று 18 பேர் உயிரிழந்துள்ளனர். அந்தவகையில் மொத்தமாக 269 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் சென்னையில் இன்று மாத்திரம் 1,155 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கடந்த மார்ச் முதல் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸில் ஏ 1, ஏ2, ஏ3, பி 1,பி2 உள்ளிட்ட வகைகள் இருப்பதாகவும் அதற்கேற்றவாறு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இத்தகைய சூழ்நிலையிலேயே, கொரோனா வைரஸில் புதிய வகை ஒன்றினை கண்டறிந்துள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்