இனவெறி எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் விதித்த பொலிஸார்!

இந்த வார இறுதியில் லண்டனில் திட்டமிடப்பட்ட இனவெறி எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு முன்னதாக பல குழுக்களுக்கு பொலிஸார் கட்டுப்பாடுகள் விதித்துள்ளனர்.

இன்று (சனிக்கிழமை) தலைநகரில் பிளாக் லைவ்ஸ் மேட்டர் ஆர்ப்பாட்டம் உட்பட பல போராட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக பெருநகர பொலிஸ்துறை தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொள்வதை மறுபரிசீலனை செய்யுமாறு பொலிஸ் படை எதிர்ப்பாளர்களை எச்சரித்துள்ளது.

‘லண்டனுக்கு வர வேண்டாம் என்று நாங்கள் உங்களிடம் கேட்டுக்கொள்கிறோம், உங்கள் குரல்களை வேறு வழிகளில் கேட்கட்டும்’ என்று மெட் தளபதி பாஸ் ஜாவிட் கூறினார்.

கடந்த வார இறுதியில் ஆர்ப்பாட்டங்களின் முடிவில் வெஸ்ட்மின்ஸ்டரில் வன்முறை மற்றும் கடுமையான ஒழுங்கின்மைகளை அடுத்து இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அந்த ஆர்ப்பாட்டங்கள் முழு அமைதியானவை என்று பொலிஸார் கூறினாலும், இதனால் டசன் கணக்கான கைதுகள் மற்றும் 27 பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்தனர்.

புதிய கட்டுப்பாடுகள் மெட் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இது இடது மற்றும் வலதுசாரி குழுக்களுக்கும் பொருந்தும்.

ஹைட் பார்க் மற்றும் டிராஃபல்கர் சதுக்கத்திற்கு இடையில் பிளாக் லைவ்ஸ் மேட்டர் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கான ஒரு குறிப்பிட்ட பாதை கட்டுப்பாடுகளில் அடங்கும். அங்கு அவர்கள் 17:00 வரை கூடியிருக்க அனுமதிக்கப்படுவார்கள்.

வலதுசாரிக் குழுக்களுக்கும் இதே போன்ற விதிமுறைகள் நாடாளுமன்ற சதுக்கத்திலும், வைட்ஹாலின் சில பகுதிகளிலும் மீண்டும் 17:00 வரை கூடியிருக்க முடியும்.

இடையூறு மற்றும் கடுமையான ஒழுங்கின்மைகளை குறைக்க ஒரு நிகழ்வுக்கு முன்னும் பின்னும் பொலிஸ் அதிகாரிகள் அமைப்பாளர்களுடன் உரையாடுவர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.