விவசாயத்திற்கு நாட்டில் முன்னுரிமை வழங்கப்படும் – ஜனாதிபதி

தற்போது காணப்படும் பிரச்சினைகள் மற்றும் குறைகளை தீர்த்து விவசாயத்திற்கு நாட்டில் முன்னுரிமை வழங்கப்படுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

அநுராதபுரம் மாவட்டத்தில் நேற்று இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரசார கூட்டங்களில் கலந்துகொண்ட ஜனாதிபதி விவசாயிகள் முகங்கொடுத்துவரும் நீர் மற்றும் ஏனைய பிரச்சினைகள் தொடர்பாகவும் அவதானத்தை செலுத்துவதாக தெரிவித்தார்.

விவசாயிகள் முகங்கொடுக்கும் உரம் மற்றும் நீர்ப்பற்றாக்குறை போன்ற பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் சந்தை வாய்ப்புக்கள் கிடைப்பது போன்ற பல பிரச்சினைகளை தீர்த்து விவசாயிகளை பாதுகாப்பதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.

மேலும் நீர் வழங்கல் பற்றாக்குறை, விவசாயத்திற்கான உரம் போன்ற பிரச்சினைகள் அரசாங்கத்தால் தீர்க்கப்படுகின்றன என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

கொடுப்பனவுகள் செலுத்தப்படாததால் உர இறக்குமதி தாமதமாகி உள்ளது என்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.