வவுனியாவில் குடும்பஸ்தரொருவரின் சடலம் மீட்பு…
வவுனியா – கிடாச்சூரி பகுதியிலிருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
செட்டிகுளம் மெனிக்பாம் பகுதியை சேர்ந்த குறித்த நபர் கிடாச்சூரி பகுதியில் உள்ள வீடொன்றில் கட்டுமான பணிகளை மேற்கொண்டு வந்திருந்தார்.
இந்த நிலையில் இன்றைய தினம் (24.07) காலை வீட்டின் பின்பகுதியில் இருந்து அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவர் வீட்டின் முதலாம் மாடியிலிருந்து தவறி விழுந்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
சம்பவத்தில் செட்டிகுளம் மெனிக்பாம் பகுதியை சேர்ந்த மோகன் சிவகுமார் (வயது 35) என்ற நபரே உயிரிழந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. சடலம் மீட்கப்பட்டு உடற்கூற்று பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக ஈச்சங்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்துக்களேதுமில்லை