வாழைச்சேனை ஆதார வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் தாக்கியோர் பினையில் விடுதலை…

வாழைச்சேனை ஆதார வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் தாக்கப்பட்டமை தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டினை அடுத்து சந்தேகத்தின் பேரில் ஐந்து நபர்களை கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவி;த்தனர்.

மேற்படி வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நோயாளியை வியாழக்கிழமை பார்வையிட சென்ற உறவினர்களுக்கு குறித்த பிரிவில் கடமையாற்றும் உத்தியோகத்தரால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இரு சாராருக்கும் இடையில் இடம்பெற்ற முரண்பாட்டினால் உத்தியோகத்தர்கள் சிலர் தாக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை தாக்குதலுக்கு உள்ளாகி பாதிக்கப்பட்ட மூன்று உத்தியோகத்தர்கள் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன், இதில் வைத்தியர் ஒருவர் தலைக் கவசத்தினாலும் தாக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் நோய் தொடர்பாக குறித்த வைத்தியசாலையில் நோயாளர்களை பார்வையிடுவதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு சில விதிமுறைகளை பின்பற்றுமாறு நோயாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வைத்தியசாலை நிர்வாகத்தினால் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இவ்விடயம் தொடர்பாக சம்பந்தப்பட்டோருக்கு விளக்கமளிக்க முற்படுகையில் உத்தியோகத்தர்; மீது இவ்வாறான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகவும், இதனை தடுக்கும் வகையில் சென்ற வேளையில் தாங்களும்; தாக்கப்பட்டதாகவும் பாதிக்கப்பட்ட உத்தியோகத்தர்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதுடன், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் பினையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.