நஸீர்என்பவர் தோற்கடிக்கப்படுவது எனக்கு கவலை இல்லை. எமது பிரதேசம் தோற்றுவிடக்கூடாது – வேட்பாளர் நஸீர்…

30 வருடங்களின் பின் அட்டாளைச்சேனை பிரதேசத்துக்கு முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினால் கிடைக்கபெற்ற வரம்தான் பாராளுமன்ற பிரதிநிதித்துவம். அதைப் பாதுகாப்பதும் பாதுகாக்கமல் விடுவதும் உங்களின் கைகளிலேயே உள்ளது என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், ஐக்கிய மக்கள் சக்தி அம்பாறை மாவட்ட பொத்துவில் தொகுதி வேட்பாளருமாகிய ஏ.எல்.முஹம்மட் நஸீர் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்த மாபெரும் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நேற்றிரவு (23) அட்டாளைச்சேனையில் இடம்பெற்றபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

முஸ்லிம் காரங்கிரஸ் கட்சியின் தலைமை எமது பிரதேச மக்களை கௌரவிக்கும் நோக்கில் 30 ஆண்டுகால பாராளுமன்ற பிரதிநிதித்து தாகத்தை தீர்த்து வைத்ததுடன் இம்முறை பொதுத் தேர்தலில் போட்டியிடுவத்கான வாய்ப்பையும் வழங்கியுள்ளது. இந்த வாய்ப்பை நாம் தவற விடுவோமாக இருந்தால் எமது பிரதேசத்துக்கான பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை நாம் பெற்றுக்கொள்ள எத்தினை ஆண்டுகள் போகும் என்று எமக்குத் தெரியாது என்பதை நாம் நன்கு சிந்திக்கவேண்டும்.

அட்டாளைச்சேனை பிரதேசத்தில் போட்டியிடுகின்ற பிறகட்சி வேட்பாளர் பாராளுமன்றம் செல்வார் என்றால் நீங்கள் அவருக்கு வாக்களிங்கள். அவருக்கு வாக்கு வங்கி என்பதே கிடையாது என்பதை நீங்கள் அறிவீர்கள். அப்படியிருக்கின்றபோது எமது வாக்குகளை ஏன் அவர்களுக்கு அளித்து வீண்விரையம் செய்யவேண்டும்.

அட்டாளைச்சேனை பிரதேசத்துக்கு 30 ஆண்டுகளின் பின்னர் கிடைத்த பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை பாதுகாக்கவேண்டும் என்று கல்முனை, சம்மாந்துறை, இறக்காமம், பொத்துவில், அக்கரைப்பற்று போன்ற பிரதேச மக்கள் அதற்கான முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றார்கள். அவர்கள் அவ்வாறு செயற்படுகின்றபோது எமது பிரதேச மக்கள் ஒவ்வொருவரும் அதற்கான விடா முயற்சிகளை இரவு பகலாக முன்னெடுத்து செயற்படவேண்டும்.

நஸீர் என்பவர் தோற்கடிக்கப்படுவது எனக்கு கவலை இல்லை. எமது பிரதேசம் தோற்றுவிடக்கூடாது என்பதுதான் எனது நோக்கமாகும். எமது பிரதேசம் வெற்றிபெறவேண்டும். 30 ஆண்டுகளின் பின்னர் எமக்கு கிடைக்கப்பெற்ற பிரதிநிதித்தும் பாதுகாக்கப்பட வேண்டும். அதை இழந்துவிட்ட பின்னர் நாம் யோசித்து எந்தப்பலனும் கிடைக்கப்போவதில்லை என்றார்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.