தமிழ் தேசிய கூட்டமைப்பு கோட்டா அரசாங்கத்துடன் இணைந்து ஒற்றையாட்சி அரசியலமைப்பை நிறைவேற்றுவதற்கே முயற்சி செய்கின்றது: கஜேந்திரகுமார் பொன்னம்பலம்…

தமிழ் தேசிய கூட்டமைப்பு கோட்டா அரசாங்கத்துடன் இணைந்து ஒற்றையாட்சி அரசியலமைப்பை நிறைவேற்றுவதற்கே முயற்சி செய்கின்றது. இது தமிழ் இனத்திற்கு செய்யும் துரோகம். இதனை மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

வவுனியா கலைமகள் விளையாட்டு மைதானத்தில் நேற்று இரவு (29.07) வன்னி வேட்பாளர்களை ஆதரித்து இடம்பெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

5 வருடத்திற்கு ஒரு தடவை தேர்தல் வருகின்ற போது மக்கள் தாம் ஆணை வழங்கிய பிரநதிதி தமக்கு ஏற்ற வகையில் செயற்பட வில்லை என்றால் அடுத்த 5 வருடத்தில் மாற்றலாம் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் தான் தெரிவு செய்வார்கள். அப்படியொரு காலசாரம் ஜனநாயக முறையில் எமக்கு பழக்கப்பட்டுள்ளது. கடந்த 10 வருடங்களாக நீங்கள் வாக்களித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பை நிராகரித்து மாற்றத்தை வேண்டி செலுத்தவும். இந்த மாற்றம என்பது வெறுமனே 5 வருடத்தற்கு மட்டுமே தாக்கம் செலுத்தும் என்று தயது செய்து நினைக்காதீர்கள். ஏனென்றால் இந்த தேர்தல் வழமையாக நடைமபெறுகின்ற தேர்தல் போன்றதல்ல.

ஜனாதிபதி கேதட்டபாய ராஜபக்டஸ இந்த தேர்தலுக்கு பிற்பாடு புதிய அரசியலரைமப்பு ஒன்றை கொண்டு வர தீர்மானித்துள்ளார். தெற்கில் புதிய அரசியலமைப்பை நிறுவிப்பதற்காக பாராளுமன்றத்தில் மூன்றில் இருண்டு பெரும்பான்மையை குறிவைத்து செயற்பட்டு வருகின்றார். புதிய அரசியலமைப்பை நடைமுறைப்படுத்துவதாக இருந்தால் குறைந்தது 150 உறுப்பினர்களின் ஆதரவு பாராளுமன்றத்தில் அவசியம். ஆகவே புதிய அரசியலமைப்பு ஒன்று கொண்டு வரப்போகிறது. கடந்த 10 வருடங்களாக தமது ஏகோபித்த ஆதவை வழங்கிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோட்டபாய ராஜபக்ஸ கொண்டு வரும் அரசியலமைப்புக்கு தங்களது ஆதரவையும் செலுத்துவதற்கு தயார் என் தெரிவித்துள்ளது. கடந்த அரசாங்கத்தின் காலத்தில் புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கை ஒன்று தயாரிக்கபடபட்டு வெளியிடப்பட்டது. அதனை தமிழ் தேசியக் கூட்டமைப்பும் இணைந்து தான் தயாரித்தது.

அந்த அரசியலமைப்பில் உள்ள விடயங்களை கொண்டு வந்தால் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்க தயார் என கூட்டமைப்பு கோட்டா அரசாங்கத்திற்கு தெரிவித்துள்ளது. ஆகவே மூன்றில் இரண்டு பெரும்பான்மை என்ற விடயம் உறுதி.

தமிழ் இனத்தின் ஆதரவைப் பெற்று வந்த கட்சி சரித்திரத்தில் முதல் தடவையாக ஒரு அரசியலமைப்பு சீர்திருத்ததைத் கொண்டு வருவதற்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இலங்கை சுதந்திரமடைந்த பின்பு மூன்றாவது அரசியலமைப்பாக அது வர இருக்கிறது. இந்த மூன்று அரசியலமைப்பையும் தமிழ் மக்கள் நிராகரித்துள்ளார்கள். ஏனெனில் ஒற்றையாட்சி அரசியலமைப்பு. இந்த ஒற்றையாடம்சி அரசியலமைப்பை நிராகரித்த படியால் தான் இந்த தீவில் தமிழ் மக்களுக்கு ஒரு அரசியல் பிரச்சனை இருக்கிறது என்பதை உலகத்திற்கு சொல்ல முடிகிறது. புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கையில் அரசாங்கத்திற்கு எந்தப் பிரச்சனையும் கிடையாது. ஆகவே இடைக்கால அறிக்கையில் உள்ள விடயங்கள் கூட்டமைப்பு கேட்பதால் உள்வாங்கப் போகிறார்கள்.

தமிழ் மக்கள் இந்த முறையும் பெருவாரியாக தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஆதரவு அளித்தால் அந்த அரசியலமைப்பு தமிழ் மக்களின் ஆதரவுடன் நிறைவேறப் போகிறது. தொடர்ச்சியாக ஒற்றையாட்சி என்று நிராகரித்த அரசியலமைப்பை நிறைவேற்ற ஆதரவு வழங்குவது சரித்திரத்தில் முதல் தடவை. பௌத்திற்கு முன்னுரிமைஇ வடக்கு- கிழக்கு தமிழர்களின் தாயகம் என்ற அந்தஸ்தை வழங்காத தமிழர் இந்த நாட்டில் தேசமாக இருக்கிறார்கள் என்பதை அங்கீகரிக்காது விட்டுள்ளது.

இந்த நாட்டில் பயங்கரவாத பிரச்சனை தான் இருந்தது. அது தற்போது முடிந்து விட்டது. இங்கு பிரச்சனை இல்லை என அரசாங்கம் சர்வதேச சமூகத்திடம் தெரிவித்தது. ஆனால் அவர்கள் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. ஏனெனில் இந்த நாட்டில் அரசியலமைப்பை தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால் இந்த நாட்டில் பிரச்சனை உள்ளது. அதனை தீருங்கள் என்றனர். நாட்டில் இருக்கும் குறிப்பிட்ட ஒரு மக்கள் அரசியலமைப்பை ஏற்காவிடின் அந்த நாட்டில் இனப்பிரச்சனை இருக்கு. அது தீர்கப்பட வேண்டும். ஜெனீவாவின் 30-1 தீர்மானத்தில் இலங்கை அரசாங்கம் அந்த நாட்டில் வாழும் அனைத்து இன மக்களும் ஏற்றுக் கொள்ளும் அரசியலமைப்பை உருவாக்க வேண்டும் என பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆகவே உலகத்தின் பார்வை எமது மக்கள் மீது உள்ளது.

இந்நதப் பின்னனியில் எமது பிரதிநிதிகள் என்று சொல்பவர்கள் தேர்தலுக்கு பின் புதிய அரசியலமைப்பை ஏற்றுக் கொள்வதாக இருந்தால் அது தமிழ் சரித்திருத்தில் ஒரு திருப்பு முனையாக அமையப்போகிறது. தமிழர் தரப்பின் ஆதரவோடு அது நிறைவேற்றப்படுமாக இருந்தால் அதற்கு பின் இந்த நாட்டில் தமிழர்களுக்கு இனப்பிரச்சனை உள்ளது என்று கூற முடியாது. அதனால் மக்களுக்கு தார்மீக கடமை இருக்கிறது. அந்த புதிய அரசியலமைப்பை தமிழ் மக்களின் இனப்பிரச்சனைக்கான தீர்வுகள் உள்ளதா என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டியுள்ளது. உண்மையில் அதில் பிரச்சனையை தீர்க்க வழிவகை இருந்தால் ஆதரிப்பதில் தவறு இல்லை. ஆனால் அது ஒற்றையாட்சி அரசியலமைப்பு. வர்த்தை ஞாலங்களை கூறுகிறார்கள். அந்த இடைக்கால அறிக்கையில் உள்ள அம்சங்கள் தமிழ் மக்களின் உரிமைகள், கொள்கைள் என்பவற்றை உதாசீனம் செய்து தமிழ் மக்களுக்கு துரோகம் செய்யும் வகையில் உள்ளது. அதனை தமிழ் மக்களின் பிரதிநிதிகள் ஏற்றுக் கொள்வதாக இருந்தால் இந்த இனத்திற்கு செய்யும் பெரிய துரோகம். அதற்கு வேறு வார்த்தை கிடையாது. எமது மக்களை ஏமாற்ற பார்கிறார்கள்.

கடந்த 72 வருடங்களாக நிராகரித்த அரசியலமைபை ஆதரிக்க சதி செய்கிறார்கள். அதில் பெளத்திற்கு முன்னுரிமை. அதனை தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரிக்கப் போகிறது. அதனால் இம்முறை மக்கள் விழிப்பாக இருந்து எமக்கு வாக்களிக்கவும். நாம் கடந்த 10 வருடங்களாக தமிழ் தேசிழயக கூட்டமைப்பின் தவறுகளை சுட்டி காட்டி வருகின்றோம். போர் முடிவடைந்து 8 மாதங்களில் 2010 ஆம் ஆண்டு தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிழையாக போகின்றது என்று தெரிவித்து தனித்து வந்தோம். தனித்து வந்தால் தோற்போம் என தெரிந்தும் நாம் எமது மக்களுக்கதக வெளியில் வந்து கடந்த 10 வருடங்களாக அவர்கள் விடும் தவறுகளை சுட்டிக் காட்டி பாதிக்கப்பட்ட மக்களின் குரலாக இருக்கின்றோம். இதனால் நாம் தான் கூட்டமைப்பின் மாற்று எனவே எமக்கு தான் மக்கள் வாக்களிக்க வேண்டும் என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.