இந்தியாவில் பாரிய விமான விபத்து; இருவர் பலி- இரண்டாக பிளந்தது விமானம்?..

டுபாயில் இருந்து வந்த ‘ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்’ விமானம் கோழிக்கோடு விமான நிலையத்தில், ஓடுதளத்தில் இறங்கிய போது விபத்துக்குள்ளானதில் விமானி உற்பட மொத்தம் இருவர் பலியானதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும் விபத்தில் பலர் காயமடைந்துள்ளனர் என்று அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.வந்தே பாரத் திட்டத்தின் கீழ், டுபாயிலிருந்து 191 பேருடன் வந்த ‘ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்’ விமானம், கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்தில், தரையிறங்கும் போது விழுந்து விபத்துக்குள்ளானதில், விமானம் இரண்டாக பிளந்தது.

கனமழை காரணமாக இந்த விபத்து நிகழ்ந்ததாகவும், விமானத்தின் முன்சக்கரத்தில் ஏற்பட்ட பழுதால் விபத்து நடந்ததாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்