விக்னேஸ்வரனுக்கு பொன்சேகா எச்சரிக்கை!!!!!!!
சிங்கள மக்களைக் குறைத்து மதிப்பிட்டால் அதற்கான விளைவுகளை விக்னேஸ்வரன் சந்திக்க வேண்டி ஏற்படும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இடைக்கால கணக்கு அறிக்கை மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
‘நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன், நாட்டின் பழைமையான மொழி தமிழ் என்று கூறியிருக்கிறார். இதன்மூலம் தமிழ் மொழிக்குப் பின்னரே சிங்கள மொழி இலங்கைக்கு வந்ததாக அவர் கூறுகிறார்.
சிங்களவர்களுக்கு இந்நாட்டிலுள்ள இடத்தை இல்லாதொழிப்பதற்கு முயலும் எவருக்கும் நாம் தலை வணங்கப்போவதில்லை. பிரபாகரனால் நாட்டைப் பிளவுபடுத்த முடியுமென நினைத்தார்.
இறுதியில் அவருக்கு என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும். விக்னேஸ்வரனால் ஒருபோதும் பிரபாகரனாக முடியாது” எனவும் அவர் தெரிவித்தார்.
கருத்துக்களேதுமில்லை