சட்டவிரோதமாக ஹெரோயின் மற்றும் கஞ்சாவினை வைத்திருந்த மூவர் கைது(video/photoes)

பாறுக் ஷிஹான்

சட்டவிரோதமாக ஹெரோயின் மற்றும் கஞ்சாவினை தம்வசம் வைத்திருந்த மூவர் சம்மாந்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 30.08.2020 ஞாயிற்றுக்கிழமை இரவு     நிந்தவூர் பிரதேசத்தில்  போதைப்பொருளுடன் சந்தேக நபர்கள் சிலர்  நடமாடுவதாக சம்மாந்துறை இரகசிய  பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய    சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எச். ஜயலத்தின் வழிகாட்டலுக்கமைய  சம்மாந்துறை பொலிஸ் நிலைய குற்றப்புலனாய்வு பிரிவின் பொறுப்பதிகாரி விஜயராஜா   தலைமையில் உப பொலிஸ் பரிசோதகர் ஜனோசன்  விஜயவர்த்தன  பொலிஸ் கன்டபிள்களான  துரைசிங்கம் திலகரட்ன  உள்ளிட்ட குழுவினர்  மேற்கொள்ளப்பட்ட  நடவடிக்கையினால்  இரவு  சட்டவிரோதமாக ஹெரோயின் போதைபொருளை வைத்திருந்த  நிந்தவூர்   பகுதியில் வைத்து   26 மற்றும் 38 வயதுடைய இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

அத்துடன் அதே பகுதியில்  10 கிராம் கேரளா கஞ்சாவினை தம்வசம் வைத்திருந்த 30 வயது மதிக்கதக்க மற்றுமொரு சந்தேக நபரும் கைது செய்யப்பட்டார்.

மேலும் கிழக்கு மாகாண சிரேஸ்ட  பிரதி பொலிஸ் மா அதிபரின்  உத்தரவிற்கமைய விசேட தேடுதல் நடவடிக்கை   சம்மாந்துறை பொலிஸ் பிரிவுகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் பல்வேறு குற்றச்சாட்டிற்காக பிடிவிறாந்து பிறப்பிக்கட்டடிருந்த 24 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேற்குறித்த தேடுதலில் கைதான அனைவரும்    சம்மாந்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.