கூலிப்படை உதவியுடன் கணவரை கொலை செய்த மனைவி!!

தமிழகத்தில் தாயுடன் சேர்ந்து கூலிப்படை உதவியுடன் கணவரை கொலை செய்த மனைவி செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த ஆலாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் பாபு. எலக்ட்ரிசியனாக பணிபுரிந்து வரும் இவர், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் மாதனூர் ஒன்றிய பிரதிநிதியாகவும் இருந்தார்.

இவருக்கு ஜெயந்தி என்ற மனைவியும், 10 வயதில் மகள் மற்றும் 6 வயதில் மகனும் உள்ளனர்.

இந்நிலையில், கடந்த 27-ஆம் திகதி வீட்டை விட்டு வெளியே ரமேஷ் பாபு பின்னர் வீடு திரும்பவே இல்லை. இதனால் ரமேஷ் பாபுவின் தந்தை உள்ளிட்ட உறவினர்கள் பலர் அவரை தேட எங்கும் கிடைக்கவில்லை.

இதையடுத்து கடந்த 28-ஆம் திகதி மாலை 4 மணிக்கு உடல் முழுவதும் பலத்த காயங்களுடன் இருசக்கர வாகனத்துடன் சடலம் ஒன்று ஏரி கால்வாய் பகுதியில் உள்ளதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

அதன் பின் பொலிசார் அந்த சடலத்தை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்து விட்டு, இது குறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

அப்போது ரமேஷ் பாபுவின் மாமியார் சரசா மற்றும் மனைவி ஜெயந்தி ஆகியோர் அவரது உறவினர்கள் கூலிப்படையினரை வைத்து ரமேஷ் பாபுவை கொலை செய்தது தெரியவந்தது.

பொலிசார் மேற்கொண்ட விசாரணையில், ரமேஷ் பாபு தினந்தோறும் குடித்துவிட்டு வந்து ஜெயந்தியை தாக்கியுள்ளார். இதுகுறித்து ஜெயந்தி அவரது தாய் சரசாவிடம் கூறியுள்ளார்.

இதனால் ஜெயந்தி மற்றும் சரசா இணைந்து தங்களது உறவினர்கள் மற்றும் கூலிப்படையினர் என 4 பேரின் உதவியோடு ரமேஷ் பாபுவை கொலை செய்ய முடிவு செய்தனர்.

கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த ரமேஷ் பாபு மீது காரை மோத வைத்து விபத்து ஏற்படுத்தினர். ஆனால் ரமேஷ்பாபு லேசான காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.

அதைத் தொடர்ந்து கடந்த 27-ஆம் திகதி ஆலாங்குப்பம் பாலாறு அருகே உள்ள விவசாய நிலத்தில் இருந்த ரமேஷ்பாபுவை பின்தொடர்ந்து சென்ற தனுஷ், கௌதமன், ராமன், விக்கி ஆகியோர் இரும்பு கம்பியால் தலையில் தாக்கி அடித்து கொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது.

இதையடுத்து மனைவி ஜெயந்தி மற்றும் மாமியார் சரசா மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்த இராமன், கௌதமன், விக்கி, தனுஷ் ஆகிய 6 பேரை பொலிசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கைது செய்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.