யாழ்ப்பாணம் – நல்லூர் பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளானவருடன் தொடர்பை பேணியவர்கள்,தனிமைப்படுத்தலில் ………

யாழ்ப்பாணம் – நல்லூர் பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளானவருடன் தொடர்பை பேணியவர்கள், சுகாதாரப் பிரிவினரால் தொடர்ச்சியாக சுய தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றார்கள்.
அந்த வகையில் தொற்றாளர்களுடன் தொடர்பினை பேணினர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் மறவன்புலவு மற்றும் கைதடி – நாவற்குழி தெற்கு பகுதிகளில் இரண்டு குடும்பங்கள் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. சாவகச்சேரி பிரதேச சுகாதார உத்தியோகத்தர்களால் குறித்த வீடுகளில்தனிமைப்படுத்தப்பட்டதற்கான அறிவுறுத்தல் ஸ்ரிக்கர்கள் இன்று ஒட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.