மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், அடுத்த ஆண்டு வருகிற சட்டமன்றத் தேர்தலுக்கு ஆயத்தமாகும் வகையில், சென்னையில் மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்:பிரசார வாகனமும் தயார் !

 

 

 

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், அடுத்த ஆண்டு வருகிற சட்டமன்றத் தேர்தலுக்கு ஆயத்தமாகும் வகையில், சென்னையில் மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். அதற்கும் முன்னதாக, தலை நிமிரட்டும் தமிழகம் என்று பிரசார வாகனத்தையும் தயார் செய்து துரிதமாக செயல்பட்டு வருகிறார்.

தமிழகத்தில் அடுத்த 2021ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. தமிழத்தில் ஜெயலலிதா, கருணாநிதி ஆகிய இரு துருவ இருபெரும் தலைவர்கள் மறைவுக்குப் பிறகு நடைபெறும் சட்டமன்றத் தேர்தல் என்பதால் இந்த தேர்தலில் அதிமுக திமுக மட்டுமல்லாமல் மற்ற கட்சிகளும் தங்களுக்கான இடத்தை உறுதி செய்யும் வகையில் தீவிரமாக களம் காண திட்டமிட்டுள்ளன.

திமுக கூட்டணியை உறுதி செய்துவிட்டது. அதே போல, அதிமுகவும் கூட்டணியை உறுதி செய்துவிட்டன. இரு கட்சிகளும் கூடுதலாக பலமான இரு கட்சிகள் கூட்டணிக்கு வந்தால் சேர்த்துக்கொள்ளத் தயாராக இருக்கிறார்கள். யாரையும் கூட்டணியில் சிதறவிட்டுவிடக் கூடாது என்பதிலும் கவனமாக இருக்கிறார்கள்.

திமுக ஒரு படி முன்னே சென்று 2021ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை தயாரிக்க குழு அமைத்துள்ளது.

இந்த சூழலில்தான், திராவிடக் கட்சிகளை விமர்சித்துவரும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தேர்தலுக்கு ஆயத்தமாவதில் வேகம் காட்டியுள்ளார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி டார்ச் விளக்கு சின்னத்தில் போட்டியிட்டு எந்த தொகுதியிலும் வெற்றிபெறாவிட்டாலும் குறிப்பிடும்படியாக வாக்குகளைப் பெற்றது.

கமல்ஹாசன் ஒரு புறம் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்துவழங்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தாலும் மறுபுறம் மக்கள் நீதி மய்யம் கட்சியை வருகிற சட்டமன்றத் தேர்தலுக்கு ஆயத்தமாக்கும் பணியிலும் துரிதமாக செயல்பட்டுவருகிறார்.

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், அடுத்த ஆண்டு வருகிற சட்டமன்றத் தேர்தலுக்கு ஆயத்தமாவது குறித்து சென்னையில் மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், 100 சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த மநீம கட்சி நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் ஆலோசனை நடத்தினார்.

ஆலோசனைக் கூட்டத்தில், வருகிற சட்டமன்றத் தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது நிர்வாகிகள் எவ்வாறு பணியாற்ற வேண்டும் என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.