ஓட்டமாவடி பகுதியில் நாளுக்குநாள் அதிகரித்துச் செல்லும் டெங்கு நோயைக் கட்டுப்படுத்த விசேட வேலைத்திட்டம்…

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவில் டெங்கு நோய்த் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துச் செல்வதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பகுதியைச் சேர்ந்த பலர் டெங்கு நோய்த் தாக்கத்தினால் பாதிப்படைந்து வாழைச்சேனை ஆதார வைத்தியசாலை மற்றும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை ஆகியவற்றில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அந்தவகையில், குறித்த பகுதியில் அதிகரித்து காணப்படுகின்ற டெங்கு நோயைக் கட்டுப்படுத்தும் தீவிர முயற்சியில் ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம், ஓட்டமாவடி பிரதேச சபை, பிரதேச செயலகம் ஆகியவை இரவு பகலாக அர்ப்பணிப்புடன் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றன.

டெங்கு நோயை கட்டுப்படுத்தும் குழுவினர் வீடுவீடாக சென்று மக்கள் மத்தியில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருவதோடு புகை விசுறல், வடிகான்களை சுத்தம் செய்தல், சிரமதானம் மேற்கொள்ளல் போன்ற வேலைகளை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.