கொவிட் 19 தொற்றுப் பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்துடன் தொடர்புகொள்வதற்கு தொலைபேசி இலக்கங்கள்.

கொவிட் 19 தொற்றுப் பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்துடன் தொடர்புகொள்வதற்கு துரித தொலைபேசி இலக்கங்களை (Hotline) அறிமுகப்படுத்தியிருப்பதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

கொவிட் 19 வைரசு மற்றும் அத்துடன் தொடர்புபட்ட நிலைமையின் போது பொதுமக்களுக்கு கொவிட் 19 தொற்று பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்துடன் இலகுவாக தொடர்பு கொள்ளக் கூடிய வகையில் இந்த துரித தொலைபேசி இலக்கங்கள் (Hotline) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த தொலைபேசி இலக்கங்கள் பின்வருமாறு:

கடமை அதிகாரி – (Duty Officer) – 011 2860002 / 0112860003 / 0112860004

மின்னஞ்சல் முகவரி (E-mail) – – covid195120@gmail.com

கடற்படை மற்றும் விமானப்படை கடமை அதிகாரி – 011 4055932 (Navy and Air Force Duty Officer)

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு – 011 3688664 / 0113030864 (Epidemiology Unit of the Ministry of Health)

இதற்கமைவாக கொவிட் 19 வைரசு மற்றும் தொடர்புபட்ட அவசர மற்றும் முக்கிய அறிவிப்புஃ விசாரணைகளுக்காக சம்பந்தப்பட்ட தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொள்ள முடியும் என்று கொவிட் 19 வைரசு தொற்றுப் பரவலைத் தடுக்கும் செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.