அமெரிக்க தேர்தலில் பிரதிநிதிகள் சபைக்கு 3வது முறை தேர்வாகியுள்ள தமிழர்!

அமெரிக்காவில் தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட ராஜா கிருஷ்ணமூர்த்தி இல்லினாய் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்கு 3வது முறையாக தேர்வாகியுள்ளார் இவர். அமெரிக்காவில் அதிபர் பதவிக்காக தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகி வருகின்றன. ஜனநாயக கட்சி சார்பில் இல்லினாய் மாகாணத்தில் போட்டியிட்ட ராஜா கிருஷ்ணமூர்த்தி இல்லினாய் மாகாணத்தில் குடியரசுக் கட்சியின் வேட்பாளர் பீட்டர் டிசியானியை எதிர்த்து ராஜா கிருஷ்ணமூர்த்தி போட்டியிட்டார். மொத்த வாக்குகளில் ராஜா கிருஷ்ணமூர்த்தி கிட்டத்தட்ட 71 சதவீத வாக்குகளைப் பெற்று அபார வெற்றி பெற்றுள்ளார்.

 

 

தமிழகத்தின் ராஜபாளையத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர் ராஜா கிருஷ்ணமூர்த்தி. இவருக்கு 47 வயதாகிறது. இவர் பொறியாளர், தொழிலதிபர், வழக்கறிஞர், அரசியல்வாதி என பன்முகத் திறன் கொண்டவர். 1973ம் ஆண்டு புதுடெல்லியில் பிறந்த ராஜா கிருஷ்ணமூர்த்தியின் பெற்றோர் சென்னையைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது அப்பாவின் ஊர் ராஜபாளையம். அம்மா தஞ்சாவூர் பகுதியைச் சேர்ந்தவர். இவரது அப்பாவிற்கு அமெரிக்காவில் பேராசிரியர் பணி கிடைத்தது. அதனால் இவர் சிறு குழந்தையாக இருந்தபோதே இவரது குடும்பத்தினர் அமெரிக்காவின் பஃபல்லோ நகரத்து குடிபெயர்ந்துள்ளனர். ராஜா கிருஷ்ணமூர்த்தி 2004ம் ஆண்டு ஒபாமாவின் செனட் பிரச்சார ஆலோசகராக பணியாற்றினார். 2008ம் ஆண்டு ஒபாமாவின் ஆலோசகராகவும் இருந்தார். 2007-2009 காலகட்டத்தில் இல்லினாய்ஸ் மாகாணத்தின் துணை நிதியமைச்சராகவும் பொறுப்பேற்றிருந்தார்.2016ம் ஆண்டில் பிரதிநிதிகள் சபைக்கு முதல் முறையாக தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது

 

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.