கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகின்ற தற்போதைய காலகட்டத்தில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவதோடு மட்டுமல்லாது மக்கள் தமது மனிதாபிமான பண்புகளை வெளிப்படுத்த வேண்டிய காலமும் இது எனவும் மூதூர் பிரதேசசபை உப தவிசாளர் சி.துரைநாயகம் தெரிவிப்பு.

கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகின்ற தற்போதைய காலகட்டத்தில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவதோடு மட்டுமல்லாது மக்கள் தமது மனிதாபிமான பண்புகளை வெளிப்படுத்த வேண்டிய காலமும் இது எனவும் மூதூர் பிரதேசசபை உப தவிசாளர் சி.துரைநாயகம் இன்று(8) தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்:

 எமது நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்தும் முகமாக அரசாங்கம் முன்னெடுத்து வருகின்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுவதோடு மட்டுமல்லாமல் தொற்றுக்குள்ளான அல்லது தொற்றுக்கு உள்ளகியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களை மனிதாபிமான ரீதியில் மக்கள் நடத்த வேண்டும். எனினும் இவர்கள் பல இடங்களில் சமூகத்தால் ஒதுக்கப்பட்டவர்களாக நடாத்தப்படுகின்றார்கள் இதனால் அவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகி வருகின்றார்கள். இதற்கு வலுச்சேர்க்கும் விதமாக அண்மையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பல செய்திகளை சமூகத்திடம் விட்டுச் சென்றிருப்பதால் இது தொடர்பாக ஆராய்ந்து இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாமல் தடுப்பதற்குரிய பொறுப்பு பொதுமக்களுக்கும் இருக்கின்றது.
கொவிட் -19 தொற்றானது சமூகத்தால் விரும்பப்படாத நோயாக பலரால் பார்க்கப்படுவதன் காரணமாக கொவிட் – 19 தொற்றுக்குள்ளானவர்களும், தொற்று ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றவர்களும் தங்களை வெளிப்படுத்திக் கொள்ளவும், பரிசோதித்துக் கொள்ளவும் தயக்கம் காட்டி வருகின்றார்கள் இதனால் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு இதுவும் ஒரு சவாலாக இருக்கின்றது.
எனவே பொதுமக்கள் தங்களையும், மற்றவர்களையும் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ளும் முகமாக சுகாதார நடைமுறைகளை மிகவும் இருக்கமான முறையில் பின்பற்றுவதோடு தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுடன் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி மனிதாபிமான முறையில் நடந்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்வதாகவும் தனிமைப்படுத்தப்படும் மக்கள் சமுதாயத்தில் ஒதுக்கப்படுவது தொடர்பாக அரசாங்கம் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
(எப்.முபாரக் )

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.