ஆங்கில, மொழியை கற்க வேண்டு மென்ற அவாவில் படித்துக்கொண்டு செல்லும் போது, என்னை பலர் இந்தப்பையனுக்கு பைத்தியமோ என்றும் கூறினார்-பேராசிரியர் றமீஸ் அபூபக்கர்.

ஆங்கில மொழியினைக் கற்க வேண்டுமென்ற அவாவில் வீதிகளில் போகும் போது, ஆங்கிலத்தைப்பேசி, பேப்பரைப் படித்துக்கொண்டு செல்லும் போது, என்னை பலர் இந்தப்பையனுக்கு பைத்தியமோ என்றும் கூறியுள்ளனர் என தென் கிழக்குப் பல்கலைக்கழக கலை, கலாசாரபீட பீடாதிபதி, கலாநிதி பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் தெரிவித்தார்.

கிழக்கு இளைஞர்கள் அமைப்பின் ஏற்பாட்டில் அதன் தலைவரும் முன்னாள் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினருமான தானிஸ் ரஹ்மதுல்லா தலைமையில் கலாசார கலாநிதி றமீஸ் அபூபக்கர் பேராசிரியராக பதவியுயர்வு பெற்றமையையிட்டு பாராட்டு விழா (07) சனிக்கிழமை அட்டப்பள்ளம் வைட் பெப்பர் விடுதியில் இடம்பெற்றது.
இங்கு கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார்.புழுதியிலிருந்து கல்வி கற்று உச்சத்திற்கு வந்திருக்கின்றேன். ஆங்கில மொழியினை அதீத அக்கறை எடுத்து கற்றுக்கொண்டு இலக்கை நோக்கி நகர்ந்தேன்.
ஆங்கில மொழியினைக் கற்க வேண்டுமென்ற அவாவில் வீதிகளில் போகும் போது ஆங்கிலத்தைப்பேசி, பேப்பரைப்படித்துக் கொண்டு செல்லும் போது, என்னைப்பலர் இந்தப்பையனுக்கு பைத்தியமோ என்று எனது தாயிடமே கூறியதாக எனது தாய் என்னிடம் கூறியிருக்கிறார்கள். ஆனால், அப்படி பல சோதனைகளையும் தடைகளையும் தாண்டியே நான் இறைவன் உதவியால் இவ்வாறு முன்னேற வாய்ப்பு ஏற்பட்டது. இன்னும் படித்துக் கொண்டு தான் இருக்கிறேன்.

எதற்கும் ஒரு இலக்கு இருக்க வேண்டும். அதன் பால் அதீத அக்கறை கொண்டு முயற்சிக்க வேண்டும். அதற்கு மேலாக ஒரு கால வரையறையை நாம் அதற்காக நிர்ணயித்துப் படிக்க வேண்டும். நானும் அவ்வாறு தான் ஒவ்வொரு படித்தரத்திற்கும் முன்னேற எண்ணியவுடன் அதற்கான கால எல்லையையும் வகுத்துக் கொள்வேன். அவ்வாறு செயற்படும் போது, எமது குறித்த காலத்திற்குள் உரிய இலக்கை அடைய முடியும்.பல்கலைக்கழகத் தெரிவின் மூலம் சட்டபீடத்திற்குச் செல்ல விருப்பமிருந்தும் குடும்பப்பின்னனி காரணமாக தென் கிழக்குப்பல்கலையில் கலைத்துறையைத்தெரிவு செய்தேன். பின்னர் சட்டபீடத்திற்குச் செல்வதற்கு முயற்சித்தேன். அம்முயற்சி கை கூட வில்லை. இவ்விடயத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கலாநிதி ஏ.எம்.ஜெமீல் ஆகியோரை மறக்க முடியாதெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அமைப்பின் உயர்பீட உறுப்பினர்களால் இங்கு பேராசிரியருக்கு நினைவுச்சின்னம் வழங்கி பொன்னாடை போர்த்திக் கெளரவிக்கப்பட்டது.
இந்நிகழ்வில், அமைப்பின் செயலாளர் முபாறக் முஸ்தபா, சிலோன் மீடியா போரத்தின் தலைவர் றியாத் ஏ.மஜீட் மற்றும் உயர்பீட உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.<

/div>

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.