முல்லைத்தீவில் 5000பனம் விதைகள் நாட்டும் கற்பகா திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது…

ஐக்கிய இராச்சியத்தின் கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பினரால் கற்பகா திட்டத்தின் கீழ் “ஒரு மில்லியன் பயன்தரு விதைகள் தாயக நிலங்களில்” எனும் தொனிப்பொருளில் மூன்றாம் கட்டமாக முல்லைத்தீவில் 5000 பனம் விதைகள் நாட்டும் திட்டம் நேற்று(07) வற்றாப்பளை அம்மன் ஆலயத்திற்கு அருகேயுள்ள நந்திக்கடல் அருகில் ஆரம்ப கட்டமாக 250 பனை விதைகள் நாட்டி ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி சமூக அபிவிருத்தி பேரவையின் ஒருங்கிணைப்பிலும், கரைதுறைப்பற்று இளைஞர் சம்மேளனத்தின் ஆதரவுடன் ஒட்டிசுட்டான் கால்நடை வைத்திய அதிகாரி பா. ஜெகஜுவன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன், மேலதிக அரசாங்க அதிபர் க. கனகேஸ்வரன், யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி, கரைதுறைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி வே. சிறிராம், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பனம் விதைகளை நாட்டி வைத்தனர்.

சுகாதார நடைமுறைகளை பின்பற்றி இடம்பெற்ற இந் நிகழ்வானது, அடுத்துவரும் நாட்களில் முல்லைத்தீவு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்டுள்ள பல இடங்களில் இத் திட்டம் இடம்பெறவுள்ளதாக ஏற்பாட்டாளர்களால் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.