திட்டங்குளம் கருப்பசாமி மறைவுவைகோ இரங்கல்…

கோவில்பட்டி தெற்கு திட்டங்குளத்தைச் சேர்ந்த கருப்பசாமி, இந்தியப் படை வீரராக லடாக் எல்லையில் பணியில் இருந்தபோது, ஊர்தி மோதலில் இறந்தார் என்ற செய்தி அறிந்து வருந்துகின்றேன்.

34 வயதான கருப்பசாமிக்கு, ஐந்து வயது, ஏழு வயதில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். கருப்பசாமியின் திடீர் மறைவால், அந்தக் குடும்பம் மட்டும் அல்ல, திட்டங்குளம் கிராமமே வேதனையில் ஆழ்ந்துள்ளது.

எத்தனையோ முறை அந்தக் கிராமத்திற்குச் சென்று இருக்கின்றேன். அங்கே, அனைவரையும் நன்கு அறிவேன். அவர்களுடைய வேதனையில், நானும் பங்கு ஏற்கின்றேன்.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், கருப்பசாமிக்கு வீரவணக்கம் செலுத்துகின்றேன்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்