மாவீரர் நினைவேந்தலை சட்டப்படி செய்யமுடியாது! ஜெயசிறில், ராஜன் ,சங்கீத்துக்கு பொலிசார் அறிவித்தல்

மாவீரர் நினைவேந்தலை கல்முனை காரைதீவு பகுதிகளில் செய்யவேண்டாம். சட்டப்படி தடைவிதிக்கப்பட்டுள்ளது என்று பொலிசார் அப்பகுதி தமிழ் உணர்வாளர்களை அழைத்து அறிவித்துள்ளார்கள்.

காரைதீவு பிரதேசசபைத்தவிசாளர் கி.ஜெயசிறில் கல்முனை மாநகரசபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் கல்முனைப்பிராந்திய இளைஞர்சேனை தலைவர் நா.சங்கீத் ஆகியோருக்கே இத்தடை உத்தரவை பொலிசார் விதித்துள்ளனர்.

விசேடஅதிரடிப்படையினர் நேற்றுக்காலை தவிசாளர் ஜெயசிறில் வீட்டிற்கு வந்து விசாரித்துஅறிவுறுத்தலை விடுத்துள்ளனர். சம்மாந்துறைப்பொலிசாரும் இதே அறிவித்தலை பிறப்பித்துள்ளனர்.

கல்முனைப்பொலிஸ் நிலையத்திற்கு உறுப்பினர் ராஜன் தலைவர் சங்கீத் ஆகியோர் அழைக்கப்பட்டு இவ்வறிறுவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்