அனைத்து மதங்களுக்கும் அவர்களின் விகிதாசார அடிப்படையில் நிதிஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் – சாணக்கியன்

அனைத்து மதங்களுக்கும் அவர்களின் விகிதாசார அடிப்படையில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சுக் குழுக் கூட்டம் நேற்று(திங்கட்கிழமை) நடைபெற்றுள்ளது.

இதன்போது பௌத்த மதத்திற்கு 300 மில்லியன் ரூபாயும், இந்து மதத்திற்கு 8 மில்லியன் ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் இதற்கு எதிர்ப்பு வெளியிட்ட இரா.சாணக்கியன், ஏனைய மதங்களுக்கும் அவர்களின் விகிதாசார அடிப்படையில் பணம் ஒக்கீடு செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயற்பாடுகள் குறித்து கவனம் செலுத்தும் வகையில் பிரதமர் தலைமையில் ஆணைக்குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும் எனவும் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

குறித்த ஆணைக்குழுவின் ஊடாக இவ்வாறான நிதியொதுக்கீடு குறித்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இன்று இடம்பெற்ற புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சுக் குழுக் கூட்டத்தின் போது அதன் உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டிருந்த ஆவணங்களின் அடிப்படையிலேயே இரா.சாணக்கியன் மேற்கண்ட விடயங்களை முன்வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.