தேர்தல் களத்தில் நுழையும் ரஜினிகாந்த்

ஊகங்களுக்கும் வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்து நடிகர் சூப்பர்(ஸ்டார்)ரஜினிகாந்த் ஜனவரி மாதம் தனது அரசியல் கட்சியைத் தொடங்கப் போவதாகவும், டிசம்பர் 31 ஆம் தேதி அறிவிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

‘எல்லாவற்றையும் மாற்றுவோம்’ மற்றும் ‘இப்போது இல்லாவிட்டால் ஒருபோதும் இல்லை’ என்ற ஹேஷ்டேக்குகளுடன் இந்த செய்தியை ரஜினி ட்வீட் செய்திருந்தார். எதிர்வரும் சட்டமன்றத் தேர்தல்களில் மக்களின் முழு ஆதரவோடு நிச்சயம் வெற்றி பெறுவோம் என்று ரஜினி தெரிவித்துள்ளார்.

 

ரஜினி அரசியலுக்கு வரமாட்டார், அவ்வப்போது அறிக்கைகளை மட்டுமே அறிவித்துக் கொண்டிருப்பார் என்று பலரும் சொல்லிக் கொண்டிருந்த நிலையில், நவம்பர் 30 திங்கட்கிழமையன்று, தனது ரசிகர் மன்றத்தின் மாவட்ட செயலாளர்களை சந்தித்தார். அன்றும் அரசியல் பிரவேச அறிவிப்பு ஏதேனும் வரலாம் என்று அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்தனர். ஆனால், நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் பயணம் குறித்த முடிவை விரைவில் வெளியிடுவேன் என்று கூறினார்.

 

எது எப்படியிருந்தாலும், இனி அறிக்கைப் போர்களும், அறிவிப்புகளும், ஊகங்களும் வதந்திகளும் என அரசியல் களம் சூடுபிடிக்கவிருப்பதற்கு கட்டியம் கூறுவதாக ரஜினியின் அரசியல் பிரவேச அறிவிப்பு வந்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்