நடிகர் ரஜினிகாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த இந்திய பிரதமர்

நடிகர் ரஜினிகாந்தின் 70 ஆவது பிறந்தநாளை ஒட்டி அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஆண்டுதோறும் ரஜினிகாந்தின் பிறந்த நாளின் போது ரசிகர்கள் அவரது வீட்டின் முன்பு குவிந்து வாழ்த்து தெரிவிப்பது வழக்கம். இந்தாண்டும் அதே போல் ரஜினி மக்கள் மன்றக் கொடியை ஏந்தியாவாறு குவிந்த சுமார் 30 க்கும் மேற்பட்ட ரசிகர்கள் ஆரவாரமாக அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். வழக்கமான பிறந்த நாளைக் காட்டிலும் இந்த ஆண்டு அவரது அரசியல் குறித்த அறிவிப்பால் ரசிகர்கள் பெரு மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பல்வேறு இடங்களிலும் அவரது ரசிகர்கள் போஸ்டர்களை ஒட்டி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்நிலையில், ரஜினிகாந்துக்கு இந்திய பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “அன்பான ரஜினிகாந்துக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். அவர் நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்

.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்