ரஜினிகாந்த் இன்று மாலை மருத்துவமனையில் இருந்து வெளியேறுவார்?

நடிகர் ரஜினிகாந்த் இன்று மாலை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவதாக அவரது சகோதரர் சத்தியநாராயணா தகவல் தெரிவித்தார்.

அதுகுறித்து சத்தியநாராயணா, “இன்று மாலை அல்லது நாளை காலை ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார். திட்டமிட்டபடி ஆலோசனை செய்து அரசியல் கட்சியை ரஜினிகாந்த் தொடங்குவார்” எனத் தெரிவித்தார்.

முன்னதாக, சிறுத்தை சிவா இயக்கும் ‘அண்ணாத்த’ திரைப்படத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படப்பிடிப்பு, ஐதராபாத்தில் நடைபெற்று வந்தது. அப்போது ரஜினிக்கு ரத்த அழுத்த மாறுபாடு ஏற்பட்டதன் காரணமாக, ஐதராபாத் அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

மேலும் ,ரஜினிகாந்தின் உடல் நிலை சீராக இருப்பதாகவும் ரஜினிகாந்தின் ரத்த அழுத்தம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்ட மருத்துவமனை, எப்போது டிஸ்சார்ஜ் செய்வது என்பது குறித்து இன்று முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்