இந்தியாவிலும் தோன்றியது மர்ம மோனோலித்! – மக்கள் அதிர்ச்சி!

உலக நாடுகள் முழுவதும் திடீரென தோன்றி மறையும் மோனோலித் பீதியை கிளப்பியுள்ள நிலையில் அது இந்தியாவிலும் தோன்றியுள்ளது.

முதன்முதலாக அமெரிக்காவின் உடா பாலைவனப்பகுதியில் மோனோலித் என்றழைக்கப்படும் உலோக தூண் திடீரென தோன்றி சில நாட்களில் மாயமானது. இது உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தொடர்ந்து பிரிட்டன், நெதர்லாந்து என உலகம் முழுவதும் பல நாடுகளில் இந்த மோனோலித் தோன்றி மறைந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்த மர்ம மோனோலித் தற்போது இந்தியாவில் தோன்றியுள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள தனியார் தோட்டம் ஒன்றில் இந்த மர்ம மோனோலித் தோன்றியுள்ளது. இதுகுறித்த புகைப்படங்களை பேஸ்புக்கில் பதிவிட்டுள்ள அந்நிறுவனம் அதை யாரும் வைத்தார்களா என்பது பற்றி எதுவும் சொல்லவில்லை.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்