ஈரோஸ் அமைப்பின் 46 ஆவது வருட நிறைவை ஒட்டி வடக்கு, கிழக்கு, மலையகம் முழுவதிலும் நிகழ்வுகள்

ஈரோஸ் அமைப்பின் 46 ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வுகள் நாடளாவிய ரீதியில் குறிப்பாக வடக்கு, கிழக்கு மாகாணங்கள், மலையகம் ஆகியவற்றில் ஈரோஸ் ஜனநாயக முற்போக்கு கூட்டமைப்பால் கொரோனா தொற்று கால பொது சுகாதார நடைமுறைகளுடன் அனுட்டிக்கப்பட்டு வருகின்றன.
இவற்றின் சிறப்பம்சமாக வறிய, வருமானம் குறைந்த, வாழ்வாதாரம் இழந்த குடும்பங்களுக்கு உலர் உணவு பொருட்களை வழங்கி வைக்கின்ற செயல் திட்டத்தை முன்னெடுக்கின்றார்கள்.
இதன்படி வன்னி மாவட்டத்தில் பன்னங்கண்டி கிராமத்தை சேர்ந்த  46 குடும்பங்களுக்கு உலர் உணவு பொருட்கள் கடந்த நாட்களில் வழங்கி வைக்கப்பட்டன.
கட்சியின் தேசிய அமைப்பாளர் தீபன் மார்க்ஸ் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் கட்சியின் அரசியல் துறை செயலாளரும், புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினருமான ஜோன்சன் லீமா, கட்சியின் வட மாகாண இணைப்பாளர் ரஜீவ், ஈரோஸின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வநாயகம் ஜாயா உள்ளிட்ட முக்கியஸ்தர்கள், செயற்பாட்டாளர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.