மட்டக்களப்பு நீரோடையில் இறால் பிடிக்க சென்றவர் சடலமாக மீட்பு !

மட்டக்களப்பு பெரிய உப்போடை நீரோடை (களப்பு) இறால் பிடிப்பதில் ஈடுபட்ட ஒருவரை முதலை இழுத்துச் சென்ற நிலையில் இன்று (05)செவ்வாய்க்கிழமை சடலம் அந்த பகுதியிலுள்ள நீரோடையில் முதலைக்கடிக்கு உள்ளாகிய நிலையில்  உயிரிழந்த நிலையில் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமைய பொலிஸார் தெரிவித்தனர்.

குமாரபுரம் புன்னைச்சோலையைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தந்தையான 48 வயதுடைய ஆரோக்கியநாதன் மரியதாஸன் என்பவரே இவ்வாறு உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்

குறித்த நபர் வழமைபோல நேற்று திங்கட்கிழமை மாலை பெரிய உப்போடைக் களப்பு பகுதில் இறால் பிடிப்பதற்கு சென்று இரவாகியும் வீடுதிரும்பவில்லை இதனையடுத்து உறவினர்கள் அவரை தேடிய நிலையில் இன்று பகல் 3 மணியளவில் நீரோடையில் முதலைக்கடித்து உயிரிழந்த நிலையில் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக  ஆரம்பகட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது  இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார்  மேற்கொண்டுவருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.